“உ.பி.யில் ரூ.10 லட்சம் கோடியில்..“ - நேரில் செல்லும் பிரதமர் மோடி

x

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரப் பிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின்போது பெறப்பட்ட முதலீட்டு முன்மொழிவுகளை தொடங்கி வைக்கும் விழா, உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, அந்த மாநிலத்துக்குச் செல்கிறார். இந்த நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 14 ஆயிரம் திட்டப் பணிகளுக்கான பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி, கல்வி போன்ற துறைகளுக்கான திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முக்கியத் தொழிலதிபர்கள், சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக, சம்பல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோவிலுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் பல துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்