உ.பி.யில் Gen-Z கிட்ஸ்-ஐ இறக்கி கோட்டையிலேயே பாஜகவை கதற விட்ட அகிலேஷ்-நடுங்கிய பெரும் அரசியல் தலைகள்

x

18வது மக்களவை தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் நுழையவுள்ள 25 வயதேயான இளம் எம்.பி.க்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

நாடாளுமன்ற உறுப்பினராக குறைந்தபட்சம் 25 வயதாகி இருக்க வேண்டும் என்ற நிலையில், 25 வயதேயான ஜென் Z கிட்ஸ் தற்போது அரசியல் களத்திலும் இறங்கி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், பீகாரில் நிதிஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அசோக் சவுத்ரியின் 25 வயதான மகள் ஷாம்பவி சவுத்ரி இளம் எம்.பி.யாக உருவெடுத்துள்ளார்.

லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஷாம்பவி சவுத்ரியை இளம் வயது வேட்பாளர் என பிரதமர் மோடி பாராட்டிய நிலையில், பீகாரில் சமஸ்திபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில், ராஜஸ்தான் பாரத்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற 25 வயதான சஞ்சனா ஜாதவ் இணைந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றிக் கண்டுள்ளார்.

இவர் ராஜஸ்தானில் பணிபுரியும் கான்ஸ்டபிள்-ஐ திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சமாஜ்வாதி கட்சி சார்பில் 2 இளம் எம்.பி.க்கள் உருவெடுத்துள்ளனர். அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் மச்சில்சாஹர் தொகுதியில் போட்டியிட்ட 25 வயதான பிரியா சரோஜ், பாஜக எம்பியை வீழ்த்து இளம் எம்பியாகியுள்ளார். இவரின் தந்தையான டூஃபானி சரோஜ், 3 முறை எம்பியாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட 25 வயதான புஷ்பேந்திர சரோஜ், 1 லட்சத்து 2 ஆயிரத்து 944 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

இவரின் தந்தையும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளருமான இந்தர்ஜித் சரோஜ் இதே தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், பாஜக எம்பியை வீழ்த்தி வென்றுள்ளார் புஷ்பேந்திர சரோஜ்.

இந்த வரிசையில், 27 வயதான பிரியங்கா ஜர்கிஹோலியும் இடம்பெற்றுள்ளார். கர்நாடகாவில், சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா, பழங்குடியினத்தை சேர்ந்த இளம் எம்பி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இளைய தலைமுறையின் அரசியல் பிரவேசம் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தும் என்ற நம்பிக்கையோடு பயணத்தை தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்...


Next Story

மேலும் செய்திகள்