உத்தரகாண்ட்டில் இடைத்தேர்தல்...முதல்வர் பதவியை தக்க வைப்பாரா புஷ்கர் சிங் தாமி?

x

உத்தரகாண்ட்டில் இடைத்தேர்தல்...முதல்வர் பதவியை தக்க வைப்பாரா புஷ்கர் சிங் தாமி?

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி கதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். எனினும், முதல்வராக அவர் பொறுப்பேற்றதால், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பாவத் தொகுதி பாஜக எம்எல்ஏ கைலாஷ் கெடோரி, தனது பதவியை ராஜினாமா செய்த‌தால், அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் நிமலா கெடோரி மற்றும் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இன்று சம்பவாத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்