2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை மாநகரில் 2வது கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மெட்ரோ ரயில் அதிகாரிகளோடு ஆய்வு செய்தார்...
ராயப்பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்படும் மெட்ரோ பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஆர் கே சாலை வரை 910 மீட்டருக்கு பவானி என்ற ஆழ்துளை இயந்திரம் துளையிடும் பணியை துவக்கி வைத்தார்... தொடர்ந்து பூந்தமல்லியில் இருந்து லைட் ஹவுஸ் வரை 28 ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டு வரும் 26.09 கிலோமீட்டர் கொண்ட 4வது வழித்தட பணிகளை ஆய்வு ஆய்வு செய்த அவர் ஆலப்பாக்கம் மற்றும் பூந்தமல்லி பணிமனை ஆகியவற்றில் நேரில் பார்வையிட்டார்... மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்
Next Story