அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த உறுதி | udhayanidhi stalin
3 சதவிகித இடஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், முதற்கட்டமாக 100 வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட் (KALAIGNAR SPORTS KIT) திட்டத்தின்கீழ் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய அவர், பட்டா பிரச்சினையை தீர்ப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகக் கூறினார்.
Next Story