உதயநிதி மீதான வழக்கு.. 5 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு

x

உதயநிதி மீதான வழக்கு.. 5 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் போட்ட உத்தரவு

சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், சனாதனம் குறித்து பேசியது தொடர்பாக, தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி விசாரித்தது. இந்த விவகாரத்தில்,

ரிட் மனுவில் திருத்தம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு மூன்று வாரகாலம் அவகாசம் அளித்து, விசாரணையை மே 6-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. ரிட் மனு தொடர்பாக பதிலளிக்க மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜம்மு-காஷ்மீர், கர்நாடக மாநில அரசுகளுக்கும், புகார்தாரர்களுக்கும் பதிலளிக்க கடந்த மே 10-ம் தேதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்