சனாதன வழக்கு.. அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு
சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா உடன் ஒப்பிட்டு பேசிய விவகாரத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது, பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நேரில் ஆஜராக விலக்கு கோரி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆகஸ்ட் 21-ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான ஆட்சேபனைகளை பதிவு செய்ய வேண்டும் என, உதயநிதி ஸ்டாலின் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.
Next Story