உதயநிதி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் சர்ச்சை.. மத்திய இணை அமைச்சர் எக்ஸ் தளத்தில் பரபரப்பு ட்வீட்

x

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரியான முறையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டதாகவும், ஆனாலும் அரசியல் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே, அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்