"இந்த முறை நமக்கே ஒதுக்க வேண்டும்..!" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நச் பதில் | DMK
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது. கடந்த முறை தேனி நாடாளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு வழங்கியதால் தோல்வி ஏற்பட்டதாகவும், இந்த முறை தி.மு.க.விற்கே தேனி தொகுதியை ஒதுக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர். அப்போது, கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை தேனியில் வெற்றிக்கொடி நாட்டிடும் வகையில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கேட்டுக்கொண்டார். இதனிடையே, மதுரை எம்பியின் செயல்பாடுகள் சரியில்லாததால், இந்த முறை கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்காமல், திமுகவிற்கு வழங்க வேண்டும் என மதுரை நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story