"அதிமுக கொடுத்த ட்விஸ்ட்.. சட்டென இந்தியா கூட்டணிக்கு எகிறிய மைலேஜ்" - குஷியில் தேஜஸ்வி யாதவ்
தேசிய ஜனநாயக கூட்டணி இப்போது அர்த்தமற்றது என்பதை அதிமுக பாஜக கூட்டணி முறிவு தெளிவாக காட்டுகிறது என, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் திமுக பலமாக உள்ளது. காங்கிரஸ், திமுக கூட்டணி பலமாக உள்ளது. சில நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடத்தப்பட்டது ஆனால் அது பலன் அளிக்கவில்லை. என கூறியுள்ளார். கூட்டணியில் இருந்து சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் ஆகிய கட்சிகள் ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது அர்த்தமற்றதாக ஆகி விட்டது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
Next Story