தவெக முதல் மாநாடு.. "ராசியான இடம்".. சூசகமாக சொன்ன புஸ்ஸி ஆனந்த்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம், ஓடைப்பட்டியில் 550 நபருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காசோலை, ஏழை மக்களுக்கு தையல் மிஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர், முதல் மாநாடு எங்கு நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் நடத்தப்படும் என்று சூசகமாக தெரிவித்தார்.
Next Story