தவெக மாநாட்டு பணியில் பிரிந்த காவலர் உயிர்.. ரூ.25 லட்சம் காசோலையை வழங்கிய அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம், விக்கரவாண்டி அருகே, அக்டோபர் 26
இரவு, தமிழக வெற்றி கழக மாநாட்டு பணியின் போது சாலை விபத்தில் சத்தியமூர்த்தி என்ற காவலர் உயிரிழந்தார். இந்நிலையில் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, சத்தியமூர்த்தியின் சொந்த ஊரான எரிச்சனம்பாளையத்திற்கு நேரில் வந்து, அரசின் சார்பில் பணியின் போது உயிரிழந்தால் வழங்கப்பட வேண்டிய 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது மனைவி சவிதாவிடம் வழங்கினார்.
அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Next Story