த.வெ.க. மாநாடு.. 10,000 பேர் கொண்ட தன்னார்வலர் படை - தினமும் ஆலோசனை நடத்தும் விஜய்

x

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில், அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய், மாவட்ட நிர்வாகிகளுடன் தினமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டு குழுவிற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 250 தொண்டரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பத்தாயிரம் பேர் மாநாட்டின் தன்னார்வலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்