தவெக நிர்வாகிகளுக்கு போஸ்ட்டிங்?.. வெளியான முக்கிய தகவல்

x

தமிழக வெற்றிக் கழக மாநாடு முடிந்த பிறகு, நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

போரூரை அடுத்த கொளப்பாக்கத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், ஒரு மெசேஜுக்காக வந்துள்ள கூட்டம் போன்று, வேறு யாருக்காவது கூடுமா? என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்திற்கு வாருங்கள் என்று அழைப்பு விட வேண்டிய அவசியம் இல்லை என்றும், விஜய் முகத்தை காட்டினாலே கூட்டம் சேர்ந்து விடும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்காமல் இருந்த‌தாகவும், அவர்கள் விஜய்க்கு தான் முதல் வாக்கை செலுத்துவேன் என்று இருந்த‌தாகவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். மேலும், மாநாடு முடிந்த முடிந்த பிறகு நிர்வாகிகளுக்கு, பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்