காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.... சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை....
  • சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவில் வெளுத்து வாங்கிய கனமழை... அதிகாலை வரை மழை தொடர்வதால் குளிர்ச்சியான சூழல்...
  • வருகிற 16, 17 ஆகிய நாட்களில் கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி மீனவர்களுக்கு அறிவுறுத்தல்... சூறாவளிக் காற்று வீசுக்கூடும் என்பதால் மீன்வளத்துறை எச்சரிக்கை....
  • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை.... தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பாதிப்பு....
  • கோவை ஆவரம்பாளையத்தில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்... கழிவுநீரும் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதி...
  • கனமழை காரணமாக குளமாக மாறிய சேலம் மத்திய பேருந்து நிலையம்... சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில், தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டிகள்...
  • கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள ரயில் மேம்பாலத்தின் கீழ் மழை வெள்ளத்தில் சிக்கிய தனியார் பேருந்து... தண்ணீர் வடிந்த பின்னர், கிரேன் உதவியுடன் பத்திரமாக மீட்பு...
  • சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பேரிடர் மேலான்மை கட்டுப்பாட்டு அறையில் பணியாளர்கள் இல்லை என குற்றச்சாட்டு... 24 மணிநேர உதவி எண்ணிற்கு அழைத்தால் ஏற்பதில்லை எனவும் பொதுமக்கள் வேதனை...
  • கன மழை எச்சரிக்கை காரணமாக சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகளில் குவிந்த பொதுக்கள்... காய்கறி, பழங்கள், பிரெட் மற்றும் பால் பொருட்களை அள்ளிச் சென்றனர்...
  • அரபிக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது... இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • சென்னை அடுத்த முட்டுக்காடு முகத்துவார பகுதியில், தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... வடகிழக்கு பருவ மழைக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக விளக்கம்...
  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில், வீரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடா?... இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் அணியில் பாபர் அசாம், ஷாகீன் அஃப்ரிடி, நஷீம் ஷா நீக்கம்...
  • சீனாவின் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார், சின்னர்.... உகான் ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா சாம்பியன்..

Next Story

மேலும் செய்திகள்