காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன... ஆட்சியை பிடிக்கப்போவது யார் என எகிறும் எதிர்பார்ப்பு...
  • முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது... துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதாக தகவல்...
  • சென்னை கதீட்ரல் சாலையில், சுமார் 46 கோடி மதிப்பில், கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார், முதலமைச்சர் ஸ்டாலின்... பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காவில் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி...
  • நெல்லை, கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு... முன்னெச்சரிக்கையாக பக்தர்களை வெளியேற்றிய பிறகு, அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது...
  • சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை... பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், குளிர்ச்சியான சூழல்...
  • சென்னையில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை குறைக்க மாநகராட்சி சார்பில், புதியதாக 4 குளங்கள்... கிண்டி ரேஸ் கிளப் பகுதியில் வெட்டப்படுகிறது....
  • சென்னை மயிலாப்பூர் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் திடீர் பள்ளம்... 10 மீட்டர் ஆழத்திற்கு ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிரமம்...
  • சொத்து வரி உயர்வை கண்டித்து, அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம்... அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடைபெறுகிறது...
  • சாம்சங் நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன், தமிழக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு... 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் நிர்வாகம் ஒப்புதல் தந்துள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் விளக்கம்...
  • சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என சி.ஐ.டி.யூ. அறிவிப்பு... போராட்ட பந்த‌லில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்குமாறும் அழைப்பு...
  • இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு... ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்றும், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி எனவும் பதிவு...
  • ஒரு அணிக்கு ஆறு வீரர்கள் மட்டுமே களமிறங்கும், புதிய வகையிலான, 'ஹாங்காங் சிக்சஸ்' கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பங்கேற்பு... அடுத்த மாதம் ஒன்றாம் தேதி ஹாங்காங்கில் தொடங்குகிறது...

Next Story

மேலும் செய்திகள்