காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (03-10-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • மதுஒழிப்பு மாநாட்டில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு... 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால், திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றும் நம்பிக்கை....
  • தமக்கு குடிப்பழக்கம் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம்...தனக்கு குடிப்பழக்கம் இருப்பது போல் பேசிய தமிழிசை செளந்தரராஜனுக்கு பதிலடி....
  • பெண் காவல் ஆய்வாளரை தள்ளிவிட்டு அடாவடியில் ஈடுபட்ட விசிக தொண்டர்கள்.... போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, விசிக நிர்வாகியின் காரை தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம்...
  • மது ஒழிப்பு மாநாட்டில் தடுப்புகளை தாண்டி முன்னேற முயன்றதால் விசிக தொண்டர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு..... பெண் காவலர் தள்ளிவிடப்பட்டதால், அதிர்ச்சி....
  • போதைப்பொருள்களால் அடுத்த தலைமுறையை அழிக்கும் சித்தாந்தத்தின் பெயர்தான் திராவிட மாடல்.... பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடும் விமர்சனம்......
  • தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது மதுவிலக்கு... காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி....
  • தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது...ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு...
  • ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல்வாதியைப் போல் செயல்படுகிறார்... மத்திய- மாநில அரசுகளின் நல்லுறவை துண்டிக்கும் வகையில் அவரது செயல்பாடு இருப்பதாக, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி...
  • வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி ராதாவை என்கவுன்ட்டர் செய்துவிடுவோம் என ஜெயிலர் மிரட்டுவதாக பரபரப்பு புகார்.....ரவுடி ராதாவின் மனைவி கூறிய புகாரில் உண்மையில்லை என வேலூர் மத்திய சிறை எஸ்.பி. பரசுராமன் விளக்கம்.....
  • தமிழக வெற்றிக் கழகக் கொடியில் யானை இடம்பெற்ற விவகாரம் குறித்து மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.... பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா தகவல்....
  • இந்தியாவில் தொழில்நுட்பத்தை உருவாக்காமல் ஏற்றுமதி செய்ய முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு... ரஷ்யா, சீனா போன்று இந்தியாவும் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தல்.....
  • சீன ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்பெயின் வீரர் அல்கராஸ்... நம்பர் ஒன் வீரரான இத்தாலியின் சின்னரை போராடி வீழ்த்தினார்....
  • மிருகம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிக்கவில்லை என்று இயக்குநர் கன்னத்தில் அறைந்தார்... கேரள நடிகை பத்மபிரியாவின் பேட்டி சமூக வலைதளத்தில் வைரல்....

Next Story

மேலும் செய்திகள்