காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • தமிழக அமைச்சரவையில் மாற்றம் - புதிதாக 4 பேர் சேர்ப்பு.... 3 அமைச்சர்கள் நீக்கம்.... இன்று மாலை 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி....
  • தமிழகத்தின் துணை முதலமைச்சராக, இன்று பதவியேற்கிறார், உதயநிதி ஸ்டாலின்.... முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் மாளிகை அறிவிப்பு....
  • தமிழக அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்தார், செந்தில் பாலாஜி... கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், நாசர் ஆகியோரும் அமைச்சரவையில் சேர்ப்பு...
  • அமைச்சர்கள் பொன்முடி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், ராஜகண்ணப்பன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம்.... நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதலாக இருந்த மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு பதில் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கீடு....
  • தமிழக அமைச்சரைவில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் நீக்கம்... முதல்வரின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை...
  • அமைச்சரவையில் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கப்படும் என தகவல்....கோவி.செழியனுக்கு உயர்கல்வித்துறையும், சேலம் பனமரத்துப்பட்டு எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் ஒதுக்கப்பட வாய்ப்பு.......
  • "திமுக கூட்டணியில் பகையை உருவாக்க முயற்சி..." கூட்டணி, கலையும் என்று எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவு பலிக்காது... காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க. பவளவிழா பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...
  • மத்தியில், ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பெரும்பான்மையின்றி ஆட்சி நடத்தி வருகிறது... பா.ஜ.க. எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்... கொஞ்சம் 'கேப்' விட்டாலும் உள்ளே புகுந்து விடுவோம் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
  • ஐபிஎல் அணியில், வீரர்களை தக்க வைப்பதற்கான விதிமுறைகள் வெளியீடு.... ஒவ்வொரு அணியும் அதிக பட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க அனுமதி.... இம்பேக்ட் பிளேயர் விதி தொடரும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவிப்பு....
  • Uncapped பிளேயர் விதிமுறைப்படி, 2025 ஐ.பி.எல்.லில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி.... சி.எஸ்.கே ரசிகர்கள் உற்சாகம்....

Next Story

மேலும் செய்திகள்