காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் அவதி... சாலைகளில் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்தனர்.....
  • மணலி துணை மின் நிலையத்தி​ல் ஏற்பட்டதீ விபத்தால் சென்னை முழுவதும் மின்தடை... சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக மின்வாரியம் விளக்கம்...........
  • சென்னை முழுவதும் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால் இரவில் தூக்கத்தை தொலைத்த மக்கள்.... ஆங்காங்கே மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்....மின்வாரியத்தின் சேவை மைய எண்ணையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என வேதனை.....
  • கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவிலான மின்தடையை சென்னை பார்த்ததில்லை என மக்கள் வேதனை..... எண்ணூர் அனல் மின்நிலையத்தை விரிவுபடுத்தி, மின்னுற்பத்தியை தொடங்க வேண்டும் என கோரிக்கை.....
  • அமெரிக்காவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..... அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...........
  • மக்கள் நலனுக்காக மேற்குவங்க முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய தயார் என மம்தா பானர்ஜி அறிவிப்பு.... கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டம்...
  • உணவக உரிமையாளர் சீனிவாசனுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்... அனைத்து மாநில பிரதிநிதிகளுடன் ஆலோசித்தே முடிவு எடுக்கப்பட்டு வருவதாக விளக்கம்...
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார் உணவக உரிமையாளர் சீனிவாசன்.... ஜிஎஸ்டி குறித்து கேள்வி சர்ச்சையான நிலையில், கைகூப்பி மன்னிப்பு கோரினார்........
  • அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்....சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கட்சியில் ஐக்கியம்......
  • மது ஒழிப்பு மாநாடு போராட்டத்திற்காக எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயார் என திருமாவளவன் சூளுரை.... மாநாட்டால் தேர்தல் களத்தில் பாதிப்பு, கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்றும் பேச்சு........
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை, அக்டோபர் 15ம் தேதி நடத்த விஜய் பரிசீலனை... காவல்துறை நிபந்தனைகளை செப்டம்பர் 23க்குள் நிறைவேற்றுவது கடினம் என்பதால், மாநாடு தள்ளிப்போகலாம் என தகவல்....
  • இன்று திருச்சியில் கூடுகிறது பா.ஜ.க. மாநில மையக்குழு... கட்சி செயல்பாடு, உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை...
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை 100-ஆக உயர்த்த வேண்டும்... உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு வலியுறுத்தல்.....
  • வெளிநாடுகளில் சைபர் கிரைம் அடிமைகளாக சிக்கிக்கொண்ட186 தமிழர்கள் மீட்பு..... சைபர் கிரைம் அடிமைகளாக இந்தியாவிலிருந்து அதிகம் செல்வது தமிழர்கள்தான் என குடிப்பெயர்வோர் பாதுகாப்பு அலுவலகம் பகீர் தகவல்.....
  • தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கப்பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்..... இரண்டாம் நாள் முடிவில் 12 தங்கம், 13 வெள்ளி, 3 வெண்கலம் என 28 பதக்கங்களை வென்று அசத்தல்.....
  • மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 18-ஆம் தேதிவரை, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..... சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.....

Next Story

மேலும் செய்திகள்