காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • அரசு முறை பயணமாக புருனே சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு... இந்திய தூதரகத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...
  • வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள கட்டிடக் கழிவுகள், குப்பைகள், மரங்கள் உள்ளிட்டவை மற்றொரு பேரழிவாக மாறக் கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை... கனமழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு அபாயம் உள்ளதாகவும் தகவல்...
  • வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவி மற்றும் வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும்... கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடிதம்...
  • பாலியல் புகார் விவகாரத்தில் நடிகர் முகேஷ் உள்ளிட்டோரை வரை கைது செய்ய தடை... நடிகர்கள் முகேஷ் , மணியம்பிள்ளை ராஜு, காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் ஆகியோரின் ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பு... எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு....
  • பாலியல் புகார் தொடர்பாக கேரள நடிகர் நிவின் பாலி மீது எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு... குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நிவின்பாலி திட்டவட்டம்...
  • நடிகை ரீமா கல்லிங்கல் இளம்பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக குற்றம் சாட்டிய பாடகி சுசித்ராவுக்கு எதிராக புகார்... மானநஷ்ட ஈடு கேட்டு, சுசித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்ப ரீமா கல்லிங்கல் நடவடிக்கை...
  • அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீதே பாலியல் குற்றச்சாட்டு இருப்பதாக நடிகர் சரத்குமார் கருத்து... நடிகர் சங்க தலைவராக இருந்தபோது பிக் பாஸ் நடிகை யாரும் தன்னிடம் பாலியல் தொடர்பாக புகார் அளிக்கவில்லை எனவும் விளக்கம்...
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரத்தில் கொட்டித் தீர்த்த மழை... ஆவடி, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது...
  • சென்னையில் 800 கிலோ மீட்டர் அளவுக்கு புதிதாக மழை நீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளது... அமைச்சர் சேகர்பாபு தகவல்...
  • ஆந்திரா வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட 1 மாத குழந்தை...விஜயவாடாவில் உள்ள சிங் நகர் பகுதியில் மீட்பு படையினர், பெட்டிக்குள் வைத்து மீட்டனர்...
  • சென்னையில் சரியாக பணியாற்றாத 5 கவுன்சிலர்களை நீக்கப்போகிறோம்... தி.மு.க. கூட்டணி உறுதியாக இருக்கிறது - குழப்பம் வேண்டாம் என்றும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி...
  • மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே அதிக பலன்... மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம்... சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேட்டி...
  • மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திட்டவட்டம்...
  • நாமக்கல் அரசு தொடக்கப்பள்ளி சுவர், சமையலறை பூட்டில் மனித கழிவு பூசப்பட்ட விவகாரம்... சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்...
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது... ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும் நியூசிலாந்து 3ம் இடத்திலும் உள்ள நிலையில், வங்கதேசம் நான்காம் இடத்திற்கு முன்னேற்றம்...
  • பாரிஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி... தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை...

Next Story

மேலும் செய்திகள்