காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- 2000 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் 65 ஆண்டுகால கனவு நனவாகப் போவதாக நெகிழ்ச்சி...
- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் உடனே கைது செய்யக்கோரி, மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்... புறநோயாளிகள் பிரிவு 24 மணி நேரம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதி....
- கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் மருத்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி.... ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் பாஜக மகளிர் அணியின் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர்....
- திருவாரூர் அருகே கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு... காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றபோது உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்...
- ரவுடிகள், அரசியல்வாதிகள் துணையுடன் நிகழும் நில அபகரிப்பு தொடர்பான கொலை, வன்முறை சம்பவங்கள் குறித்த விசாரணையை கண்காணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது... சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...
- நிலச்சரிவின் கோரப்பிடியில் சிக்கிய வயநாட்டில் மாயமானவர்களின் நிலை என்ன? தேடுதல் பணியை தொடர்வது குறித்து இன்று இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு...
- வயநாடு நிலச்சரிவுக்கு ஆந்திரா சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரணம்... ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு....
- அமெரிக்காவில் இருந்தாலும் கட்சி, ஆட்சியை கவனிப்பேன் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை.... கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால், பதவிப்பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை....
- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதுமான நிதி ஒதுக்காத மத்திய அரசுக்கு கண்டனம் உள்பட அதிமுக செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.... தமிழ்நாட்டில் மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்தவும் வலியுறுத்தல்....
- மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரி கேள்வி... 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என அதிகாரிகளை கண்டித்த அமைச்சர் உதயநிதி...
- மழைநீர் வடிகால் பணிகளை அடுத்த 30 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது... நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி...
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான மோதலுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.... இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்........
- இரண்டு தேசிய விருதுகளை தட்டிச் சென்றது காந்தாரா திரைப்படம்... சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான விருதுகளை வென்றது....
- சிறந்த கன்னட படமாக கே.ஜி.எப்-2 படத்திற்கு தேசிய விருது.. சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருதை வென்றார் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ்....
Next Story