காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (12-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- பாரிஸ் ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகல நிறைவு... இந்தியா சார்பில் மனு பாக்கர், ஸ்ரீஜேஷ் தேசியக்கொடியை ஏந்தி அணிவகுப்பு...
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவு... 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்... ஒரு வெள்ளி ஐந்து வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களுடன் இந்தியா 71வது இடம்...
- மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை... திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல்... சாலைகளில் பெருக்கெடுத்த நீரால் வாகன ஓட்டிகள் அவதி...
- விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த மின்சாதன பொருள் வெடித்துச் சிதறி பாதிப்பு...அதிகப்படியான ஒளியால் 9ம் வகுப்பு சிறுமியின் கண் பார்வை பறிபோன பரிதாபம்...
- சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய லூப் சாலையில், நவீன மீன் அங்காடியை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்...திறப்பு விழாவை ஒட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு...
- மகளிர் உரிமை தொகை திட்டம், வருங்கால துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது... அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்...
- நடிகர் விஜய் திரைத்துறையை போல, அரசியலிலும் தெளிவு மற்றும் உழைப்புடன் பயணிக்க வேண்டும்... திமுக எம்பி கனிமொழி அறிவுரை...
- வக்பு வாரிய சட்ட திருத்தத்தால் பாதிப்பு இல்லை என கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வக்பு வாரிய உறுப்பினரா?... அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி...
- அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி...தமிழ்நாடு அரசு விளக்கம்...
- பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் தான், எடையை சரிவர நிர்வகித்திருக்க வேண்டும்... மருத்துவக் குழுவினர் பொறுப்பாக மாட்டார்கள் என்றும் ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா கருத்து...
- பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தப் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத் வெள்ளிப்பதக்கம் கோரிய விவகாரம்... நாளைக்குள் தீர்ப்பு வெளியாகும் என அறிவிப்பு...
Next Story