காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
  • வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம்... கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்பு...
  • வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி... நூற்றுக்கணக்கான மக்களின் கனவுகள் தகர்ந்துவிட்டதாகவும் வேதனை...
  • நிலச்சரிவில் சிக்கி மேப்பாடி நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்... பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை கேட்டறிந்தார்...
  • வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.... சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்க சசிதரூர் எம்.பி, வலியுறுத்தல்....
  • தமிழகத்தில் வரும் 16ம் தேதி வரை, பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..... விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியதால் குளிர்ச்சியான சூழல்.....
  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 42 ஆயிரத்து 957 மாணவர்கள் விண்ணப்பம்.... முதல்கட்ட கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் தொடங்குகிறது.....
  • அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து அதிகாரிகள் ஓரிரு நாட்களில் அறிக்கை அளிக்க இருப்பதாக அமைச்சர் முத்துச்சாமி தகவல்... முதலமைச்சரின் ஆலோசனை பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி...
  • அமைச்சர் முத்துசாமி தேதி அறிவித்தால் உண்ணாவிரத்தை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிப்போம்... அத்திக்கடவு அவிநாசி திட்டம் விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...
  • போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு... அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு...
  • தூத்துக்குடி அருகே 12ம் வகுப்பு பயிலும் பட்டியலின மாணவருக்கு கத்திவெட்டு.... முன்விரோதம் காரணமாக டியூசன் செல்லும் வழியில் தாக்கிய கும்பல்....
  • கல்வி நிறுவனங்களில் ஏற்படும் பிரச்சனைகளை தலைமையாசிரியர்களே தீர்த்துக் கொள்ள வேண்டுமா?.... சபாநாயகர் அப்பாவு கருத்திற்கு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு மறுப்பு....
  • கூகுள் ப்ளே ஸ்டோரில் MY V3 ad நிறுவன செயலி தற்காலிகமாக முடக்கம்... பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் பரிந்துரையின் பேரில் கூகுள் நிறுவனம் நடவடிக்கை...
  • சென்னை அடுத்த திருப்போரூரில் அதிமுக மற்றும் அமமுக பிரமுகர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம்... இடத் தகராறில் நிகழ்ந்த மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு...
  • வெள்ளிப்பதக்கம் கோரி இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்த விவகாரம்... இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்...

Next Story

மேலும் செய்திகள்