காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (07-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம்... பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
- மீனவர் பிரச்சினை குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்... இலங்கை அரசிடம் பேசி விரைவில் தீர்வு எட்டப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக தகவல்...
- நடுக்கடலில் 13 மணி நேரமாக தத்தளித்த நாகை மீனவர் மீட்பு... அந்த வழியாகச் சென்ற காரைக்காலை சேர்ந்த பைபர் படகு மீனவர்கள், மீட்டு கரை சேர்த்தனர்...
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை... சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் சிரமத்திற்கு ஆளான வாகன ஓட்டிகள்...
- சேலம், ஈரோடு, மதுரை, சிவகங்கை, திருவாரூர், விருதுநகர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் வெளுத்து வாங்கிய மழை... திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் கழிவு நீரும், மழை நீரும் கலந்து ஓடியதால் பக்தர்கள் அவதி...
- வங்கதேச நாடாளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு அதிபர் முகம்மது சஹாபுதீன் உத்தரவு... நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனிஸை ஆலோசகராக கொண்டு இடைக்கால அரசை அமைக்க மாணவர் அமைப்பினர் கோரிக்கை...
- வங்கதேசத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை மீது சிறுநீர் கழித்த இளைஞரால் பரபரப்பு... சிலை உடைக்கப்பட்ட நிலையில் மற்றொரு சம்பவத்தால் அதிர்ச்சி...
- வங்கதேசத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் 24 பேர் உயிரோடு எரிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்... ஹசீனா கட்சி தலைவரின் ஓட்டலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்...
- வங்கதேசத்தில் இந்துக்களுக்கு சொந்தமான கடைகளில் கொள்ளை... இந்து கோயில்கள் தகர்ப்பு... வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களின் நிலையை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாக நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்...
- வங்கதேசத்தில் நடக்கும் பதற்றமான சூழல், இந்திய ஆட்சியாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை... மக்கள் நினைத்தால் ஆட்சியில் தொடர முடியாது எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி...
- சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுதலைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு... சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகள்...
- ஆகஸ்ட் 9ம் தேதி காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம்... அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...
- 1970ஆம் ஆண்டு, திருச்சியில், பெண்கள் கல்லூரிக்காக பெரியார் வழங்கிய நிலத்தை மோசடி செய்ததாக வழக்கு... மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு கண்டனம்... காவல் ஆணையர் விசாரித்து பதிலளிக்குமாறு உத்தரவு....
- பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி...84 மீட்டர் தூரத்தைக் கடந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார்...
- ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி... 3க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜெர்மனி இறுதிப்போட்டிக்கு தகுதி...
Next Story