காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • உள்நாட்டு கலவரம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தப்பி வந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா... லண்டன் செல்ல உள்ளதாக தகவல்...
  • வங்க தேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி அறிவிப்பு... அவசர நிலை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் திட்டவட்டம்...
  • தொடரும் பதற்றம் காரணமாக இந்தியா - வங்கதேசம் இடையிலான ரயில் சேவை ரத்து... வங்க தேச எல்லையில் பாதுகாப்பை அதிகரித்தது இந்தியா... கடலோர காவல்படையும் தீவிர கண்காணிப்பு...
  • வங்கதேசத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை அடித்து உடைத்த போராட்டக்காரர்கள்... சுத்தியல், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கர தாக்குதல்...
  • பிரதமர் அலுவலக சமையல் அறைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்... பிரியாணியை வெளுத்து வாங்கிய காட்சி...
  • வங்கதேச கலவரம் காரணமாக, மேகாலயா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்... வங்கதேச எல்லை ஒட்டியுள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசு உத்தரவு...
  • நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் 22 பேர் கைது... 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...
  • மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்திக்கிறார், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்... மீனவர்கள் கைது தொடர்பாக தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு நேரில் வலியுறுத்துகிறார்...
  • வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்திப்பு... மீனவர்கள் விவகாரம் குறித்து தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு...
  • கோவையில் இன்று புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல்... நெல்லை மேயர் தேர்தலைப் போன்று, அதிருப்தியாளர் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்காக, திமுக மேலிட பிரதிநிதி, கோவை பயணம்...
  • பேராசிரியர்கள் பணி புரிவதாக பொய் கணக்கு காட்டி மோசடி செய்த விவகாரம்... தனியார் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஓராண்டுக்கு ரத்து செய்ய முடிவு? என தகவல்...
  • நள்ளிரவு நேரத்தில் குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... குளித்துக் கொண்டிருந்த மக்களை, அபாய ஒலி எழுப்பி, அப்புறப்படுத்திய போலீசார்....
  • தமிழகத்தில் வருகிற 11ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்... காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிப்பு....
  • வயநாடு நிலச்சரிவு புனரமைப்பு பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் தேவை என கேரள முதல்வர் பினரயி விஜயன் தகவல்...நிலச்சரிவு பாதிப்பால், கேரள அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்...
  • வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக கோவையில் இருந்து சென்ற பெண்கள் குழு... முறைப்படி அடக்கம் செய்வதற்கு தேவையான உபகரணங்களுடன் வயநாடு பகுதிக்கு 8 பெண்கள் சென்றனர்...
  • சென்னை வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், அதி வேகமாக சொகுசு கார்களில் வட்டமடித்த திமுக பெண் கவுன்சிலரின் மகன்... 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை...
  • ஓசூர் அருகே, தந்தையை கொன்று விட்டு, 17 வயது மகளை கடத்திச் சென்ற இளைஞர்... பெங்களூருவில் கைது செய்த போலீசார்... கடத்தப்பட்ட சிறுமி மீட்பு...
  • பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனில்,வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் போராடி தோல்வி... மலேசிய வீரர் லீயிடம் தோற்றார்...

Next Story

மேலும் செய்திகள்