காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • சென்னையில் கிண்டி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் பெய்த கனமழை... தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர்...
  • மதுரவாயல் , போரூர், வானகரம், ராமாபுரம் வளசரவாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை...சாலைகளில் குளம்போல் நீர் தேங்கியதால், ஊர்ந்து சென்ற வாகனங்கள்...
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்... ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சமூக நீதியை சட்டப்பூர்வமாக நிறைவேற்றியவர் கருணாநிதி என புகழாரம்...
  • வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக, தவறான தரவுகளைக் காட்டி மக்களை ஏமாற்றக் கூடாது... தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி தரவுகளை அரசு வெளியிட்டது திட்டமிட்ட நாடகம் எனவும் பாமக கண்டனம்...
  • கூட்டணி குறித்து சர்ச்சையாக வேண்டும் என்பதற்காக பேசவில்லை என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் விளக்கம்... காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வை புரிந்தே பேசியதாகவும் பேட்டி...
  • வரும் 2029-ஆம் ஆண்டிலும் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்... பிரதமராக மீண்டும் மோடி வருவார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை...
  • மின் கட்டண உயர்வை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்... அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்குப்பதிவு...
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமார்... நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் எனவும் எச்சரிக்கை...
  • நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க இன்று காலை 11 மணிக்கு தேர்தல்... மேயர் வேட்பாளராக 25வது வார்டு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தேர்வு...
  • சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் ஏரி முழுவதும் ஆகாய தாமரை மண்டியதால் குடியிருப்புகளுக்குள் புகுந்த தண்ணீர்... கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்...
  • கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 380 ஆக உயர்வு... சாலியார் பகுதியில் இதுவரை 213 உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தகவல்...
  • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படையெடுக்கும் பொதுமக்களால் மீட்புப்பணியில் பாதிப்பு எதிரொலி... இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பெய்லிபாலத்தை கடக்க ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே அனுமதி...
  • பொறியியல் படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் 20 ஆயிரத்து 232 இடங்கள் ஒதுக்கீடு... வரும் 7ஆம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை உறுதி செய்து, சேரலாம் என அறிவிப்பு...
  • ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது... மிரட்டல் விடுத்தவர் யாராக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வலியுறுத்தல்...
  • சென்னை காமராஜர் சாலையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து... தாத்தாவின் கண்முன்னே ஐந்து வயது குழந்தை உயிரிழந்த சோகம்...
  • 19 தங்கம், 26 வெள்ளி உள்ளிட்ட 71 பதக்கங்களுடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா முதலிடம்... இரண்டாம் இடத்தில் சீனா, மூன்றாம் இடத்தில் ஃபிரான்ஸ்... 3 வெண்கல பதக்கங்களுடன் 57வது இடத்தில் இந்தியா...
  • சென்னையில் நடைபெற உள்ள இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது... 1,700 ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம்...

Next Story

மேலும் செய்திகள்