காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04-08-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • ஆளுநர்களின் ஆலோசனைகள் நிறைவேற்றப்படும்... குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உறுதி...
  • அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்துவிட்டு படிகளில் ஏறி நிற்க அதிமுக வெட்கப்பட வேண்டும்... அமைச்சர் மதிவேந்தன் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் கூட்டறிக்கை...
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் அச்சப்படுகிறார்... பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம்...
  • சாதி பார்க்காத கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிட்டது ஏன்?... முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சுளீர் கேள்வி...
  • அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம்... வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு...
  • நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் கைது.... எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி விசைப்படகையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை...
  • வயநாடு நிலச்சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்... மேலும் 25 பேர் மாயமாகியுள்ளதாகவும், தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்...
  • வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 6வது நாளாக தொடரும் மீட்புப்பணி... உயிரிழந்தோர் எண்ணிக்கை 365ஆக உயர்வு...
  • வயநாட்டில் சடலங்களை பார்த்து பார்த்து தூங்க முடியவில்லை... மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜே.சி.பி. ஆபரேட்டர்கள் வேதனை...
  • வயநாடு நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மாயமான நிலையில், 5 உடல்கள் மீட்பு... கண்ணீருடன் எஞ்சியவர்களை தேடி வரும் இளைஞரின் பரிதாப நிலை.... உடல்கள் கிடைக்காததால் இளைஞருக்கு ஆறுதல் கூறிய ராணுவ வீரர்கள்...
  • ராணுவத்தில் இணைந்து சேவையாற்ற விரும்புவதாக மீட்புப் பணியில் ஈடுபடும் ராணுவத்தினருக்கு மூன்றாம் வகுப்பு மாணவன் கடிதம்... ராணுவத்தில் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக சிறுவனுக்கு ராணுவம் சூப்பர் பதில்...
  • வயநாடு மீட்புப் பணியில் நவீன மனித மீட்பு ரேடார் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்... இந்த கருவி மூலம் நிலத்தில் 16 அடி ஆழம் வரை உயிர்கள் இருப்பதை கண்டறிய முடியும் என தகவல்...
  • கூடலூரில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்து வருவதால் அதிர்ச்சி... வயநாடு போன்ற சம்பவம் ஏற்படுமோ என மக்கள் அச்சம்...
  • வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இஸ்லாமிய பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை... பெண்ணை மீட்க அவரது தாய் கோரிக்கை...
  • புதிதாக உருவாக்கப்பட உள்ள திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமனம்... நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு....
  • சேலத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம்.... கணவனே பெண்ணை பைப்பால் அடித்துத் துன்புறுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு...
  • டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு 7.15 மணிக்கு சேப்பாக்கத்தில் நடக்கிறது... கோவை, திண்டுக்கல் அணிகள் இடையே பலப்பரீட்சை...

Next Story

மேலும் செய்திகள்