காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சென் நதிக்கரையில் கோலாகலமாக துவங்கியது ஒலிம்பிக் திருவிழா.. மழைக்கு நடுவே பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்...
  • பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவில் சென் ஆற்றில் படகுகளில் நடந்த வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு..... பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தலைமையில், இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை ஏந்தி உற்சாகம்....
  • பாரிஸின் ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கிய மிதக்கும் அணிவகுப்பு, ஈபிள் டவர் அருகே நிறைவு..... மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளை சென் நதியின் இருபுறமும் நின்றபடி லட்சக்கணக்கானோர் கண்டுரசிப்பு....
  • பாரிஸ் ஒலிம்பிக் திருவிழாவில் இஸ்ரேலிய வீரர்கள் அணிவகுப்பின்போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பார்வையாளர்கள் முழக்கம்.... காசா மீதான தாக்குதலை கைவிடுமாறு முழக்கமிட்டதால் பரபரப்பு...
  • பிரான்சில் சில ரயில் நிலையங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு.... ஒலிம்பிக் திருவிழாவைக் காண வந்தவர்கள் ரயில் பயணிகள் தவிப்பு.... தாக்குதலை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு....
  • டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நிதி ஆயோக் கூட்டம்...குடியரசுத் தலைவர் மாளிகை கலாசார மையத்தில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் பங்கேற்கிறார்கள்....
  • நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..கர்நாடகா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப் முதலமைச்சர்களும் புறக்கணிப்பு....
  • புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி இடையே மோதல் எதிரொலி.... நிதி ஆயோக் கூட்டத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு...
  • சரியாக கட்சிப் பணி ஆற்றாத அதிமுக நிர்வாகிகள் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள்...அதிமுக மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை....
  • வழக்கு நிலுவையில் இருக்கும்போது , அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்?..எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி....
  • அதிமுக இணைந்தால் மட்டும் போதும், தனக்கு எந்த பதவியும் தேவையில்லை.. முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உருக்கம்....
  • மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி..7 ஆண்டுகளுக்கு மேலாகியும், பதில் அறிக்கை தாக்கல் செய்யாததால் நீதிபதிகள் கடும் அதிருப்தி....
  • கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது அச்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவு.... தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை....
  • அமைச்சர் பொன்முடியின் 14 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை.... செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் எம்.பி.. கெளதம சிகாமணி தொடர்புடைய வழக்கில் அதிரடி...
  • போலீஸ் காவல் முடிந்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு ஜூலை 31-ம் தேதி வரை நீதிமன்ற காவல்... மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு...
  • மாநாட்டுக்காக மதுரையில் இடம் கிடைக்காத நிலையில் திருச்சியில் தேர்வு செய்த இடமும் விஜய்க்கு கைகூடுமா?... அனுமதி கிடைக்காததால் கோவை, சேலம் போன்ற தமிழகத்தின் மற்ற நகரங்களில் இடம் தேர்வு நடைபெறுவதாக தகவல்...
  • டிஎன்பிஎல் 24வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அபார வெற்றி....மதுரை பாந்தர்ஸ் அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது...

Next Story

மேலும் செய்திகள்