காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (24-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
- மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை அதிரடியாக குறைவு... சவரநுக்கு 2080 ரூபாய் குறைந்ததால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி...
- இந்தியாவை உலகின் 3வது மிகப்பெரிய நாடாக உருவாக்கும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு... உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் ஏராளமான திட்டங்கள் பட்ஜெட்டில் இருப்பதாகவும் புகழாரம்...
- மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பெயர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு... மெட்ரோ ரயில் திட்டம், வெள்ள பாதிப்புக்கான நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும் காட்டம்...
- பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளhttps://youtu.be/Zahpd7eIHLg நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை... மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து முதல்வர் ஸ்டாலின் அதிரடி...
- பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் விமர்சனம்... தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெறாதது மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் என்றும் கருத்து...
- சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டம் மாநில அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுகிறது... 2ம் கட்ட திட்டத்தின் செலவை தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் தகவல்...
- மத்திய பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்... கூட்டணி கட்சிகளை தாஜா செய்துள்ளதாகவும், மற்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...
- மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று போராட்டம்... பாரபட்சமான பட்ஜெட் என குற்றச்சாட்டு...
- டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்கள் புறக்கணிப்பு... மத்திய பட்ஜெட்டில் தங்களது மாநிலங்களை புறக்கணித்துள்ளதாக கூறி அதிரடி...
- தமிழகத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை...... வெள்ளத் தடுப்பு, வெள்ள நிவாரணம் குறித்த அறிவிப்பும் வெளியாகாததால் அதிர்ச்சி...
- பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டம்.... பீகாரில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 26 ஆயிரம் கோடியும், ஆந்திராவின் அமராவதி நகர வளர்ச்சி திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு........
- டி.என்.பி.எல். தொடரின் 22வது லீக் போட்டியில் கோவை கிங்ஸ் அணி அபார வெற்றி... மதுரை அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல்...
Next Story