காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
x
  • சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை.. கண் இமைக்கும் நேரத்தில் சுற்றி வளைத்து, சரமாரியாக வெட்டி கொன்ற கும்பல்..
  • உணவு டெலிவரி ஊழியர்களைப் போல உடை அணிந்து வந்து கொலையை அரங்கேற்றிய கும்பல்.. இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு..
  • ஆருத்ரா மோசடி வழக்கில் ஆற்காடு சுரேஷூடன் ஏற்பட்ட பகையால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாரா? 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை...
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலு உட்பட 8 பேர் கைது... விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டி....
  • ஆம்ஸ்ட்ராங் உடலை பார்க்க ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த இயக்குநர் பா. ரஞ்சித், நடிகர் தீனாவுக்கு அனுமதி மறுப்பு.. மருத்துவமனை வளாகத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் கண்ணீர் விட்டு கதறல்...
  • பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்... தமிழகத்தில், காவல்துறை, அரசு, சட்டம் என எதன் மீதும் அச்சமற்ற நிலையில் தொடர்ச்சியாக குற்றங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு...
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடும் கண்டனம்.. தமிழக அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்..
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்... தமிழகத்தில் காவல்துறையும், உளவுத் துறையும் முற்றிலும் சீரழிந்து சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டதாக விமர்சனம்..
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கண்டனம்.. திமுகவின் மூன்றாண்டு ஆட்சிகள் தொடர் கொலைகள் அரங்கேறி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்....
  • விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக - நாம் தமிழர் இடையே பயங்கர மோதல்..ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம்...... இரண்டு பெண்கள் காயம்..
  • வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க மறுக்கும் திமுக அரசின் துரோகத்தை மன்னிக்க முடியாது.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவேசம்...
  • விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜகவின் உத்தரவால், அதிமுக, பாமகவை ஆதரிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்...2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக மறைமுக ஏற்பாடு என்றும் பேச்சு....
  • சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி.....12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியிடம் வீழ்ந்தது....
  • டிஎன்பிஎல் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை அணி வெற்றி... 142 ரன்கள் இலக்கை துரத்திய சேப்பாக் கில்லிஸ், 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..

Next Story

மேலும் செய்திகள்