"TNPSC செய்த தவறுக்காக 127 பேருக்கு வேலை மறுப்பதா?" - கொந்தளித்த ராமதாஸ்

x

இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணி நியமனத்தில் டிஎன்பிஎஸ்சியின் குளறுபடிகள், முறைகேடுகள் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஎன்பிஎஸ்சி செய்த தவறுக்காக 127 பேருக்கு வேலை மறுப்பது நியாயமல்ல என தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், அறிவிக்கப்பட்ட கல்வி தகுதி இல்லை என தேர்ச்சி ரத்து செய்யப்பட்ட 163 பேரில் 36 பேருக்கு மட்டும் பணி வழங்குவது முறையா என கேள்வி எழுப்பியுள்ளார். சில அதிகாரிகள் கொடுத்த அழுத்தத்தால் தேர்வாணையம் 36 பேருக்கு பணி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதில் நிகழ்ந்த குளறுபடிக்கு தேர்வர்கள் எந்த வகையிலும் காரணமல்ல என்பதால் தேர்ச்சி சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட 127 பேருக்கு தகுதிக்கேற்ப வேறு 2ஏ தொகுதி பணி வழங்கப்பட வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்