``அரசு செலவில்... பாராட்டு விழா நடத்தினால்..'' அன்புமணி ஆவேசம்
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் பத்து மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்ற 3,949 தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள், ஆசிரியர்களுக்கு அரசு சார்பில் ஆகஸ்ட் 4ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். வணிக நோக்கத்துடன் செயல்படும் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தினால் மோசமான முன்னுதாரணமாக போய்விடும் என குறிப்பிட்டுள்ள அவர், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவை ரத்து செய்து விட்டு, அதற்கான ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு 100 சதவீதம் தேர்ச்சி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story