பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களுக்கு முற்றிப்புள்ளி வைக்க தமிழக அரசு எடுத்த அதிரடி ஆக்சன்
பள்ளிகளில் சாதிய மோதல்களை தடுத்தல் மற்றும் மாநில கல்விக்கொள்கை ஏற்படுத்துதல் தொடர்பான இரு விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள் குறித்து ஆராய, துணைக்குழுக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் சாதிய மோதல்களைத் தடுக்க பரிந்துரைகள் அளிக்க, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலும், தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக, மாநில கல்விக் கொள்கையை ஏற்படுத்த, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் முருகேசன் தலைமையிலும் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த இரு விசாரணைக் குழுக்கள் தொடர்பான பரிந்துரைகளும், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த இரு விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகளை ஆராய்வதற்கு, துணைக் குழுக்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இரண்டு வார காலத்தில் இந்த குழுக்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரண்டு நீதி அரசர்களும் அளித்த பரிந்துரைகளை ஆராய்ந்து, அமல்படுத்துவதற்கு சாத்தியமான அம்சங்கள் தமிழக அரசிடம் வழங்கப்படும் எனவும்,
அதன் பின்னரே பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.