``முதல்வர் சொன்னது அதிர்ச்சியளிக்கிறது''..! - அரசுக்கு ராமதாஸ் திடீர் கோரிக்கை

x

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க முடியாத நிலையை உருவாக்கி விடும் என்றும், முதல்வர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் அதை நீதிமன்றங்கள் ரத்து செய்யும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தினால்தான், அதில் ஒவ்வொரு சமுதாய மக்களின் சமூக பின்தங்கிய நிலைமை குறித்த விவரங்கள் தெரிய வரும் என்பதால், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்