வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் என்ன..? - முதல்வருடன் அமைச்சர் இன்று ஆலோசனை
வேளாண் நிதி நிலை அறிக்கை வருகிற 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டார். வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள், வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பயிர் ரகங்களை உருவாக்குவது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story