தமிழ்நாடு அரசின் மெகா திட்டம் - நிறைவேற போகும் 1 லட்சம் குடும்பங்களின் கனவு

x

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார். பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை வரும் 25-ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 5-ஆம் தேதிக்குள் பணியாணை வழங்க வேண்டும் என்றும், ஜூலை 10-ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024-25-ஆம் நிதி ஆண்டில் ஒரு வீட்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வீதம், ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3, ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்