அரசுக்கு அன்புமணி வைத்த அதிமுக்கிய கோரிக்கை
மனித - விலங்கு மோதலைத் தடுக்க சிறப்புப் படை அமைக்க வேண்டுமென, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் 152 பேர் யானைகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேற்குத் தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள மாவட்டங்களில் மனித - விலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், வன விலங்குகள் தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story