ஆளுநருக்கு கூட்டாக ஷாக் கொடுத்த திமுக கூட்டணி கட்சிகள்.. பரபரக்கும் ராஜ்பவன் | TN Governor

x

ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன...

ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் மாலை தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டியிருக்கும் காங்கிரஸ், அவரளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது. கூட்டாட்சியை, அரசியலமைப்பை மதிக்காத ஆளுநருடன் தேனீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை என சி.பி.எம். அவரது அழைப்பை நிராகரித்துள்ளது...

ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊது குழலாக செயல்படுகிறார் என விமர்சித்து தேனீர் விருந்தை சிபிஐ புறக்கணித்துள்ளது. பதவிக் காலம் முடிந்தும் ஆளுநர் பதவியில் நீடிப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என கூறியிருக்கும் மனிதநேய மக்கள் கட்சியும், ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. மதிமுக மற்றும் விசிகவும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன...


Next Story

மேலும் செய்திகள்