முதல்வர் கொண்டுவரும் அதிமுக்கிய தீர்மானம்.. அதிர போகும் சட்டப்பேரவை

x

சாதிவாரி கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது

10. 5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்ற போது முதலமைச்சர் ஸ்டாலின், சாதிவாரி கணக்கெடுப்பும் மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடத்த மத்திய அரசை வலியுறுத்தி இந்தக் கூட்டத் தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9:30 மணிக்கு பேரவை கூடியதும் வினாக்கள் விடைகள் நேரத்துக்கு பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அரசினர் தனி தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

அதில் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். முதலமைச்சரும் அரசினர் தனி தீர்மானம் எதற்காக கொண்டுவரப்படுகிறது என்பது குறித்து கருத்துக்களை முன் வைக்க உள்ளார்.

சாதிவாரியான கணக்கெடுப்பின் அவசியம் குறித்தும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரசினர் தனி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. 2021-ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்கவேண்டும் என்று என்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்த உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்