அடியோடு மாறும் 50 ஆண்டு தமிழக சட்டசபை... வெளியான முக்கிய அறிவிப்பு | TN Assembly
பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 50 ஆண்டுகால சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பம் வளர்வதற்கு முன், சட்டப்பேரவை நிகழ்வுகளை பொதுமக்கள், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் அறிந்து கொண்டனர்.
தொழி்ல்நுட்பம் வளர்ந்த பிறகு, தமிழக சட்டப்பேரவை செயலகம் அனைத்து நவீனங்களையும் உள்வாங்கி, தற்போது பேரவையில் கேள்வி நேர நிகழ்வுகள், முதல்வரின் முக்கிய அறிவிப்புகள், கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 50 ஆண்டு நிகழ்வுகளை மக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு வார்த்தையை பதிவிட்டால், உதாரணமாக கருணாநிதி, ஜெயலலிதா என தலைவர்களின் பெயரை பதிவிட்டால், அவர்கள் பேசிய அனைத்தும் வரும்.
அதே போல், காவிரி, கச்சத்தீவு என முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவாதங்களும், நிகழ்வுகளும் வருகின்றன