திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு..? - நாட்டுக்கே அதிர்ச்சி தகவல் சொன்ன நாயுடு

x

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்க, விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டி உள்ளார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான என் டி ஏ கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100 நாட்கள் ஆகிவிட்டது. அதை முன்னிட்டு மங்களகிரியில் என்டிஏ கூட்டணி சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையில் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றும், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு பிரசாதம் தயாரிக்க ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பயன்படுத்தினார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

சுத்தமான நெய்யை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட கலப்பட நெய்யை பயன்படுத்தி லட்டு தயாரித்து இருப்பதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஐந்தாண்டு கால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது என்று கூறிய அவர், அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைத்தே தீரும் என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்