"ஹிந்தி கட்டாயத்தின் எதிரொலி.. மாநில அரசுகளிடமே ஒப்படைக்க வேண்டும்.." பொங்கி எழுந்த திருச்சி சிவா

x

மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா எம்.பி., ஏகலைவா மாதிரி பள்ளிகளில் பணியாளர்கள் நியமன பொறுப்பு மாநில அரசுக்களிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு இந்தி கட்டாயம் என தகுதி நிர்ணயம் செய்ப்பட்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தென்னிந்திய மாநிலங்களில் பணியமர்த்தப்படுகிறர்கள் என்றார். பணியாளர்களுக்கு உள்ளூர் பழங்குடியின மாணவர்களின் கலாச்சாரம், மொழியை புரிந்துக் கொள்வது கடினமாக இருக்கிறது, இதனால் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது, மாணவர்கள் சேர்க்கை குறைகிறது, மாணவர்கள் பள்ளிகளை விட்டும் வெளியேறுகிறார்கள் என திருச்சி சிவா குற்றம் சாட்டினார். எனவே ஏகலைவா மாதிரி பள்ளிகளில் பணியாளர்களை பணி அமர்த்தும் பொறுப்பை மாநில அரசுக்களிடமே ஒப்படைக்க் வேண்டும் என்றவர், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்