"திருமாவளனுக்கு எதிராக பிடிவாரண்ட்".. விளக்கத்தை கேட்டதும் மாறிய முடிவு
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை ரத்து செய்து, மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது தொடர்பான வழக்கு மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகாத திருமாவளவனுக்கு எதிராக கடந்த 31ஆம் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட அன்று, திருமாவளவன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றதால் ஆஜராக முடியவில்லை என்று வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். இதை ஏற்று பிடிவாரண்டை திரும்ப பெற்ற நீதிபதி, வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
Next Story