"மத்திய அரசு செய்யும் சூழ்ச்சி"...பரபரப்பாக பேசிய திருமாவளவன்

x

உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்.சி - எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நீக்க மத்திய அரசு சதி செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார். இட ஒதுக்கீட்டின்கீழ் வரும் பணியிடங்களுக்கு போதிய நபர்கள் கிடைக்காவிட்டால், அந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்யலாம் என யுஜிசி முடிவு செய்ததாக வெளியான தகவல் சர்ச்சையானது. இதற்கு, மத்திய கல்வி அமைச்சகம் மறுப்பு தெரிவித்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய வழிகாட்டு விதிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்