"நாட்டில் பல பிரச்சனை இருக்கு... அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும்" லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பரபரப்பு

x

நாட்டில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்த விவாதம் தேவையில்லாதது என, நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் 'ஆர் யூ ஓகே பேபி' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், இப்படம் குழந்தை தத்தெடுப்பு குறித்து பேசும் படமாக தயாராகி இருப்பதாகவும், அபிராமி, சமுத்திரகனி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதனிடையே இந்தியாவின் பெயர் மாற்றம் குறித்து கருத்து கூறி சர்ச்சையில் சிக்க விரும்பவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்