விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகி கைது
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் காயத்ரி. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகியான இவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சமூக நலத்துறை அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி வருவதாக கூறிய இவரிடம், பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த நிலையில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாரளிக்கப்பட்டது. காயத்ரி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், அவரின் கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாக இருந்த காய்த்ரியை தொடர்ந்து தேடி வந்தனர். இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்த காய்த்ரியின் இரண்டு மனுக்களும், தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தலைமறைவாகி இருந்த காயத்ரியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து சொகுசு கார்கள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்