"சாட்சி இதுதான்.." முதலமைச்சருக்கு நன்றி சொன்ன டி.எம்.சௌந்தரராஜன் குடும்பத்தினர்
மதுரை முனிச்சாலையில் 'கலைமாமணி' டி. எம். சவுந்திரராஜன் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக சென்னையில் டி. எம். சவுந்திரராஜன் வசித்த சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, மதுரையில் அவரது சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, முதலமைச்சருக்கு டி. எம். சவுந்திரராஜன் குடும்பத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story