மனதின் குரல் நிகழ்ச்சி.. பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி
- மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்று வரும் காதி மகோத்சவ் மூலம் நடைபெற்றுள்ள காதி பொருட்களின் விற்பனை 1.25 லட்சம் கோடியை கடந்துள்ளதாக குறிப்பிட்டார்.
- சுற்றுலா மற்றும் ஆன்மிக யாத்திரை செல்லும் மக்கள், உள்ளூர் தயாரிப்பு பொருட்களையே வாங்குமாறும், தற்சார்பு பாரதம் என்ற கனவை நிறைவேற்றுவோம் என்றும் குறிப்பிட்டார்.
- ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை ஆழப்படுத்த இலக்கியம் மிகச்சிறந்த ஊடகமாக திகழ்வதாக குறிப்பிட்ட பிரதமர்,
- தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலமாக இந்தியாவை இணைப்போம் என்ற திட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும்,
- இந்த திட்டத்திற்காக அவர் கடந்த 16 ஆண்டு காலமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
- அதேபோல், கன்னியாகுமரியை சேர்ந்த ஏ.கே பெருமாள் என்பவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கதை கூறும் பாரம்பரியத்தை பாதுகாத்து வருவதாகவும், கிராமிய கலை வடிவத்தை புத்தகமாக எழுதி இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story