ஆளுநர் பற்றி கேட்ட கேள்வி..நச்சுனு பதில் சொன்ன கி.வீரமணி
பழ.அதியமான் எழுதிய "வைக்கம் போராட்டம்" என்னும் நூலின் கன்னட மொழிபெயர்ப்பை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நூலினை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியிடம் ஆளுநர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மகிழ்ச்சியான ஒரு நாளில் துயரமான செய்தியை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
Next Story