முதல்வர் தலைமையில் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்குகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இந்த மாநாட்டில், அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை - வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாவட்ட நிர்வாகம், சட்டம் - ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான ஆய்வினை இந்த மாநாட்டில் முதலமைச்சர் மேற்கொள்ள உள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் துறை ரீதியாக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள், 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதி நிலை அறிக்கை, வேளாண் அறிக்கை, அமைச்சர்களினால் மானிய கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.